அராபிய பதாகைகள் மீது தடை உத்தரவு

இந்த செய்தியைப் பகிர்க

நாட்டின் பல இடங்களிலும் உள்ள அராபிய மொழியிலான பெயர் பதாகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சுற்றுநிருபம் வெளியிடப்பட்டு உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்து உள்ளார்.

இதன்படி இவ்வாறான பெயர் பதாகைகளை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கைகள் அதிகாரிகளால் எடுக்கப்படுகின்றன என்றார்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில்தான் பெயர் பதாகைகள் இருக்க முடியும் என்பது பொது நியதி ஆகும் என்றும் இவை தவிர்ந்த மொழிகளில் பெயர் பதாகைகளை வைப்பதாயின் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Add a Comment