புலிகளிடம் கூலிக்கு வேலை செய்த தயா மாஸ்டர்

இந்த செய்தியைப் பகிர்க

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் ஊடக பேச்சாளராக இருந்த தயா மாஸ்டருக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் எதிர்வரும் 08 ஆம் திகதி எடுக்கப்பட உள்ளது.

இவ்வழக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் செவிமடுக்கப்பட உள்ளதுடன் தயா மாஸ்டரை ஆதரித்து ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் ஆஜராகின்றார்.

விடுதலை புலிகளுக்கு உதவி, ஒத்தாசை செய்தது, அவர்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் இவருக்கு எதிரான குற்ற பத்திரத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

அவர் புலிகள் இயக்க உறுப்பினர் அல்லர் என்றும் புலிகளிடம் மாத சம்பளத்துக்குதான் வேலை செய்தார் என்றும் தயா மாஸ்டர் தெரிவித்து உள்ளார்.

இவர் ஆங்கில ஆசிரியராக இருந்தவர். புலிகளால் மொழிபெயர்ப்பாளராக உள்ளீர்க்கப்பட்டார். பின் புலிகளின் ஊடக பேச்சாளராக செயற்பட்டார்.

Add a Comment