யாழ்ப்பாண தளபதிக்கு விரைவில் தலைமை பதவி

இந்த செய்தியைப் பகிர்க

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சிக்கு புதிய தலைமை பொறுப்பு ஒன்று வழங்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்டு உள்ள நிலைமைகளை கருத்தில் கொண்டு இராணுவத்தில் புதிய பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு இதற்கு பொறுப்பாக இவர் நியமிக்கப்பட உள்ளார் என்று தெரிகின்றது.

இதே நேரத்தில் தற்போதைய இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்கவுக்கு பதவி நீடிப்புக்கு ஜனாதிபதியால் வழங்கப்படாத பட்சத்தில் இவர் இராணுவ தளபதி நியமனம் பெறுவார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Add a Comment