சிங்கள டாக்டரின் பாலியல் வக்கிரம்

இந்த செய்தியைப் பகிர்க

ஆஸ்திரேலியாவில் சிகிச்சை பெற வந்த பலவீனமான பெண் நோயாளி ஒருவர் மீது சிங்கள வைத்தியர் ஒருவர் பாலியல் தாக்குதல் மேற்கொண்டார். டாக்டரின் பெயர் பிரியந்த பத்மிகே தயானந்தா – வயது 49.

நோயாளியின் சம்மதத்தை பெறாமல் பாலியல் ஊடுருவல் நடத்தினார். நோயாளியின் வயிற்று பகுதியை சோதித்தபோதே அங்க சேஷ்டை செய்தார். இவர் கடமை புரிந்த அரசாங்க வைத்தியசாலையில் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சம்பவம் இடம்பெற்றது.

படுக்கையில் நோயாளி கிடந்த நிலையில் டாக்டர் திரை சீலைகளை மூடினார். நோயாளியின் உடுப்பு, பிரா ஆகியவற்றை இழுத்தார். நோயாளியின் உள்ளாடைக்குள் கையை புகுத்தினார்.

நோயாளி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வைத்தியசாலையை விட்டு வெளியே ஓடி ரக்ஸி ஒன்றில் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். ஆனால் டாக்டர் தொடர்ந்து சுமார் 06 வாரங்கள் வரையில் இவருக்கு தொலைபேசி அழைப்புகள் விடுத்ததுடன் குறுந்தகவல்களும் போனில் அனுப்பினார். உனது அழகான வயிற்றை நான் தடவியது நினைவில் உள்ளதா? என்று ஒரு குறுந்தகவலில் வினவினார்.

இச்சம்பவங்களுக்கு முன்னதாக அவ்வருடம் ஒக்டோபர் மாதம் சத்திர சிகிச்சையை தொடர்ந்து நோயாளி பெண் வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றபோது டாக்டர் இவர் மீது விசேட அக்கறை காட்டி இருக்கின்றார். மீண்டும் சந்திப்போம் என்று சொல்லி இவரின் தலையை வருடி விட்டிருக்கின்றார்.

நோயாளிக்கு டாக்டரின் பெயர் நீண்டதாகவும் விசித்திரமானதாகவும் இருந்தது. இவரின் தொலைபேசி இலக்கத்தை நோயாளி தறுதலை டாக்டர் என்பதாக பதிவு செய்தார். இவர் வைத்தியசாலைக்கு முறைப்பாடு செய்தபோது ஆண் வைத்தியர்களின் புகைப்படங்கள் அடையாளம் காண்பிப்பதற்காக இவருக்கு காட்டப்பட்டன. ஆனால் இவர் தவறுதலாக வேறு ஒரு டாக்டரின் புகைப்படத்தை உடனடியாக காண்பித்தார். மீண்டும் தெளிவாக பார்த்து விட்டு காட்டுமாறு சொல்லுமாறும் திரும்பவும் இதே தவறை செய்தார்.

இப்பாலியல் தாக்குதல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது பாலியல் தாக்குதல் மேற்கொண்ட டாக்டர் தயானந்தா அல்ல, வேறு ஒருவர் என்பதாக சிங்கள டாக்டரின் சட்டத்தரணி வாதாடினார். குற்றம் புரிந்த டாக்டருக்கு பதிலாக வேறு ஒரு டாக்டரின் புகைப்படத்தை நோயாளி அடையாளம் காட்டியது சிறிய தவறு என்று வழக்காளியின் சட்டத்தரணி முன்வைத்தார்.

இதே நேரத்தில் பொலிஸாருக்கு சிங்கள டாக்டர் வழங்கிய வீடியோ வாக்குமூலம் நீதிமன்றத்துக்கு காண்பிக்கப்பட்டது. மனைவியுடன் வாழ்வதாலும், நோயாளி பெண்ணை அழகானவள் அல்ல என்று நினைத்ததாலும், அவளுக்கு பல நோய்கள் இருக்கலாம் என்பதாலும் அவளை பொருத்தமற்ற வகையில் தொட்டிருக்கவில்லை என்று இதில் டாக்டர் தெரிவித்து இருந்தார்.

ஒரு பிள்ளையின் தந்தையான டாக்டர் இப்பெண்ணுக்கு குறுந்தகவல்கள் அனுப்பியதை நிராகரித்தார். ஆயினும் அவருடைய கையடக்க தொலைபேசியில் எவ்விதம் இப்பெண்ணுக்கு குறுந்தகவல்கள் போயின? என்கிற கேள்விக்கு டாக்டரிடம் மறுமொழி இல்லை. இப்பெண் விபரீதமானவள் என்றும் வித்தியாசமானவள் என்றும் கண்டு பிடித்திருந்தார் என்றும் டாக்டர் சொன்னார்.

யூரிகள் இன்று புதன்கிழமை சுமார் 10 மணித்தியாலங்கள் இவ்வழக்கு தொடர்பாக கலந்தாலோசித்தனர். பாரதூரமான அப்பட்டமான நம்பிக்கை மோசடியை டாக்டர் செய்து உள்ளார் என்று கண்டு கொண்டனர். டாக்டரை உடனடியாக சிறையில் போட முடியும் என்று தெரிவித்த நீதிபதி ஒவ்வொரு நாளும் பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும், தலா 10,000 அமெரிக்க டொலர் பெறுமதியான காசு பிணையையும், சரீர பிணையையும் செலுத்த வேண்டும் ஆகிய கடுமையான நிபந்தனைகளில் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார். டாக்டருக்கான குற்ற தீர்ப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி வழங்கப்பட உள்ளது.

Add a Comment