இந்திய கடவுச்சீட்டுடன் இலங்கையர் கைது

இந்த செய்தியைப் பகிர்க


35 வயது உடைய இலங்கை தமிழர் ஒருவர் பங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் இந்திய கடவுச்சீட்டில் கங்கேரிக்கு பயணிக்க முயன்றபோது கைது இடம்பெற்று உள்ளது.

இலங்கையில் மேல் மாகாணத்தை சேர்ந்த மார்க்கண்டு சசிக்குமார் என்பவர் 2012 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து மதுரையில் தங்கி இருந்து புகைப்பட பிடிப்பாளராக தொழில் பார்த்தார்.

இலங்கையை சேர்ந்த முகவர் ஒருவரின் உதவியுடன் கடந்த ஏப்ரல் மாதம் பங்களூருக்கு சென்றார். மதுரையில் பிறந்ததாக காண்பித்து இந்திய கடவுச்சீட்டு பெற்று கங்கேரி நாட்டுக்கான விசாவையும் பெற்றார்.

முன்னணி கம்பனி ஒன்றில் 2014 இல் இருந்து வேலை செய்வதாகவும் அலுவலக விடயம் சம்பந்தமாகவே கங்கேரிக்கு செல்வதாகவும் இவர் ஆரம்பத்தில் சொன்னார்.

ஆயினும் அதிகாரிகள் சந்தேகப்பட்டு இவரை தொடர்ந்து விசாரித்தபோது இவர் உண்மையில் இலங்கையர் என்று தெரிய வந்தது. இவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் போடப்பட்டார்.

Add a Comment