சஹ்ரானின் பிரதான சகா கைது

இந்த செய்தியைப் பகிர்க


தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரான் மௌலவியின் பிரதம இணைப்பாளர் குருணாகலில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார். முஹமட் அரோஸ் என்பவரை விசேட பொலிஸ் பிரிவு ஒன்று கைது செய்தது.

கட்டுப்பொத்தவை வதிவிடமாக கொண்ட இவர் சஹ்ரானுடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்றும் தேசிய தௌஹீத் ஜமாத்தின் முன்னிலை செயற்பாட்டாளர் என்றும் சந்தேகிக்கப்படுகின்றார்.

நிலத்துக்கு கீழ் 80 அடி வரையிலும் ஸ்கான் பண்ணி பார்க்க கூடிய உபகரணம் ஒன்று இவரின் உடைமையில் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளது. இவர் புதையல் தோண்டுகின்ற நடவடிக்கைகளுக்காக இதை பயன்படுத்தி இருக்கின்றார் என்றும் நம்பப்படுகின்றது.

Add a Comment