தமிழ்நாட்டில் ஐ. எஸ் வேட்டை

இந்த செய்தியைப் பகிர்க

இந்தியாவின் தேசிய புலனாய்வு ஏஜென்சி தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள பல இடங்களிலும் இன்று காலை ஐ. எஸ் தீவிரவாதிகள் குழு ஒன்றை இலக்கு வைத்து தேடுதல் வேட்டைகளை மேற்கொண்டது.

ஐ. எஸ் தீவிரவாதிகள் குழு தொடர்பாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்து உள்ள நிலையிலேயே தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர். இக்குழுவின் தலைவர் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை சூத்திரதாரியாக நின்று மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் முகநூல் நண்பர் ஆவார்.

அன்பு நகர், போடனூர், குனியமுத்தூர் ஆகியவை அடங்கலான இடங்களில் தேடுதல்கள் நடத்தப்பட்டன. கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டைகளின் தொடர்ச்சியாக இவை முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் இக்குழுவின் தலைவர் ரியாஸ் அபூபக்கர் – வயது 29 ஐ கைது செய்தனர். இவர் கேரளாவில் உள்ள சர்வதேச பிரசித்தி வாய்ந்த சுற்றுலா தலங்கள் மீது தற்கொலை குண்டு தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டு இருந்தார் என்று விசாரணைகளில் தெரிய வந்தது. பாலக்காட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படுகின்ற வரை இவர் சஹ்ரானின் பிரசார வீடியோக்களை பார்வையிட்டு செவிமடுத்து வந்திருக்கின்றார். தற்கொலை குண்டுதாரியாக மாறுவதற்கான தயார்ப்படுத்தல்களை இவ்வாறாக மேற்கொண்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதத்தின் பின் தேடுதல் வேட்டைகள் மேற்கொள்ளப்பட்டன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து இந்தியாவின் தெற்கு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

சஹ்ரான் குழுவை சேர்ந்த சிலர் காஷ்மீர் அடங்கலாக இந்தியாவில் சில இடங்களுக்கு வந்ததாக சொல்லப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக ஆராய இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்சியை சேர்ந்த இரு நிபுணர்கள் கொழும்புக்கு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Add a Comment