முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய ஒன்றியம்

இந்த செய்தியைப் பகிர்க

இலங்கையில் முஸ்லிம்கள் மீது அரசியல், சமய ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவது குறித்து மிகுந்த அவதானம் செலுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூது குழு அறிவித்து உள்ளது.

இது நாட்டில் சமாதானம், நல்லிணக்கம் ஆகியவற்றை வெகுவாக பாதிக்கின்ற விடயம் ஆகும் என்றும் தெரிவித்து உள்ளது.

இக்குழுவினர் இன்று பிரதமரை சந்தித்து பேசியபோது இக்கருத்துகளை வலியுறுத்தி இருந்தனர் என்றும் சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடுகள் களையப்பட்டு வன்முறைகள் கைவிடப்பட்டு சமாதானம், சாந்தி கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர் என்றும் இவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Add a Comment