காதல் மனைவியை கைப்பிடிக்க நேர்முக தேர்வு

இந்த செய்தியைப் பகிர்க


அமெரிக்காவில் யூட்டா மாநிலத்தை சேர்ந்த விசித்திரமான கோடீஸ்வரர் ஒருவர் புதிய மனைவியை கைப்பிடிப்பதற்காக வழக்கத்துக்கு மாறான நடைமுறையை கையாள போய் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறினார்.

வீதியோரங்களில் பிரமாண்டமான விளம்பர பதாகைகளை காட்சிப்படுத்தினார். நேர்முக தேர்வுக்கு வருமாறு நாள் குறித்து அழைத்தார்.

மோர்மன் தேவாலயத்தை பின்பற்றுகின்ற கோடீஸ்வரர் மனைவி ஒருவரை தேடுகிறார், பொருத்தமான விண்ணப்பதாரிகள் இணைய தளம் மூலம் விண்ணப்பித்து ஜூன் 07 ஆம் திகதி நேர்முக தேர்வில் கலந்து கொள்ளுங்கள் என்பதாக காட்சிப்படுத்தப்பட்ட விளம்பரங்களில் காணப்பட்டன.

கடந்த 31 ஆம் திகதி வரையிலேயே விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. ஆனால் இம்முறை சந்தர்ப்பத்தை தவற விட்டவர்கள் எதிர்கால நேர்முக தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று இணைய தளத்தில் ஆலோசனை முன்வைக்கப்பட்டு உள்ளது.

விண்ணப்பதாரிகள் விண்ணப்பத்தில் பல கேள்விகளுக்கும் எழுத்துமூலம் மறுமொழி வழங்குமாறு கேட்கப்பட்டு இருந்தனர். உதாரணமாக எவ்வகையான உடல் அமைப்பை கொண்டு உள்ளனர்? என்று கேட்கப்பட்டு இருந்தது. அத்துடன் சமய நம்பிக்கை தொடர்பாகவும் கேட்கப்பட்டு இருந்தனர். இரண்டு புகைப்படங்களை இணைக்குமாறும் கேட்கப்பட்டனர்.

இவர் முன்பு வெள்ளை மாளிகையில் உத்தியோகம் பார்த்து இருக்கின்றார். ஆனால் காதல் மனைவியை கண்டு பிடிக்க இவ்வாறான நடைமுறை கைக்கொள்ளப்படுவது இது அல்ல முதல் தடவை. சிகாகோவை சேர்ந்த நடுத்தர வயது வர்த்தகர் ஒருவரும் இவ்வாறான நடைமுறையை கைக்கொண்டு இருந்தார்.

Add a Comment