புலனாய்வு பிரிவுக்கு புதிய தலைவர்

இந்த செய்தியைப் பகிர்க

அரசாங்க புலனாய்வு சேவையின் தலைவராக மேஜர் ஜெனரல் ருவான் குலதுங்க நியமிக்கப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு இன்று அறிவித்தது.

இன்று காலை ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்நியமனம் இவருக்கு வழங்கப்பட்டதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

இதன் தலைவராக பதவி வகித்த பிரதி பொலிஸ் மா அதிபர் உடல் நிலையை காரணம் காட்டி கடந்த 08 ஆம் திகதி பதவியில் இருந்து விலகினார்.

மேஜர் ஜெனரல் குலதுங்க 1984 ஆம் ஆண்டு கடெட் அதிகாரியாக இராணுவத்தில் இணைந்தவர். இவர் இப்புதிய நியமனத்துக்கு முன் பாதுகாப்பு அமைச்சில் பல உயர் நிலை பதவிகளையும் வகித்தவர் ஆவார்.

Add a Comment