காரைதீவில் விசேட யாகம்

இந்த செய்தியைப் பகிர்க

கதிர்காம பாத யாத்திரிகர்ளுக்கு தெய்வீக அனுக்கிரகம் வேண்டி காரைதீவில் இன்று வெள்ளிக்கிழமை விசேட யாகம் மேற்கொள்ளப்பட்டது.

கடற்கரை வீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கின்ற ஸ்ரீ சிவசக்தி முத்துமாரி அம்மன் கோவிலில் ஆலயத்தின் பரிபாலகர் ஜீவன் ஐயாவின் ஏற்பாட்டில் உருத்திர மகா யாகம் வளர்க்கப்பட்டு விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

இராணுவத்தினர் அதிகாலை முதல் காரைதீவில் விசேட சுற்றிவளைப்பு மேற்கொண்டபோதிலும் கணிசமான பக்த அடியார்கள் இவற்றில் கலந்து கொண்டனர்.

பக்த அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Add a Comment