நாமலின் திருமணத்தால் மோடி அதிர்ச்சி

இந்த செய்தியைப் பகிர்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வரும், அவரின் அரசியல் வாரிசுமான நாமல் ராஜபக்ஸ எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி திருமணம் செய்கின்றார்.

விளையாட்டு துறையின் தீவிர ஆர்வலரும், Lanka Sports Reisen இன் ஸ்தாபருமான திலக் வீரசிங்கவின் ஒரே புதல்வியே நாமலின் வருங்கால மனைவி ஆவார். மண பெண்ணின் தாயார் ஒரு காலத்தில் தேசிய விருது வென்ற ஓட்ட வீராங்கனையான அருணி விக்கிரமரட்ண ஆவார். இவர்கள் 09 ஹோட்டல்கள் நடத்துகின்றனர்.

இரு வீட்டாரும் சுப நாள் பார்த்துதான் செப்டெம்பர் 17 ஆம் திகதியை தீர்மானித்து உள்ளனர். ஆனால் அன்றைய தினம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினம் அன்றுதான். நரேந்திர மோடி 1950 ஆம் ஆண்டு பிறந்தவர்.

அண்மையில் நரேந்திர மோடி மகத்தான தேர்தல் வெற்றியை தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வந்தார். அவர் இந்திய தூதரகத்தில் அரசியல் பிரமுகர்களை சந்தித்து பேசிய பின்னர்தான் விமான நிலையத்துக்கு புறப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ ஆகியோரும் சந்திக்க வந்திருந்தனர்.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் மஹிந்த ராஜபக்ஸவுடன் நாமல் ராஜபக்ஸ இந்தியாவுக்கு வந்து சந்திப்பு மேற்கொண்டதை பிரதமர் மோடி நினைவுபடுத்தி கூறினார். நாமல் ராஜபக்ஸவை குசலம் விசாரித்தார். வருகின்ற செப்டெம்பர் 17 ஆம் திகதி திருமணம் செய்ய உள்ளார் என்று நாமல் பதில் வழங்கினார். ஏன் அன்றைய தினத்தை தெரிவு செய்தீர்கள்? என்று மோடி வினவினார்.

தெரியாது, அது ஒரு திகதி மாத்திரம்தான், அப்பாதான் அந்த நாளை தீர்மானித்தார் என்று நாமல் சற்று பதற்றம் அடைந்தவராக சொன்னார். அப்போது குறுக்கிட்ட மஹிந்த அது ஒரு சுப நாள் என்றார். அப்போது புன்முறுவல் பூத்த மோடி இக்கேள்வியை எதற்காக கேட்டேன் தெரியுமா? என்று பதில் கேள்வி கேட்டார். அன்றைய தினம் எனது பிறந்த நாள் என்று மோடி சொன்னார்.

இந்திய பிரதமராக மூன்றாவது தடவையாக பதவி வகிக்கின்ற நரேந்திர மோடியின் பிறந்த நாளில் திருமண வாழ்க்கையில் இணைவது நாமல் ராஜபக்ஸவுக்கு பயங்கர மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்றால் மிகை அல்ல.

Add a Comment