புலிகள் மூவர் மீது போர் குற்ற வழக்கு

இந்த செய்தியைப் பகிர்க

யுத்த காலத்தில் மேற்கொண்ட குற்ற செயல்கள் தொடர்பாக புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் மூவருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்ற பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இவ்வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி எடுக்கப்பட உள்ளது. கடற்படையினர் 18 பேர், இராணுவத்தினர் 08 பேர், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 26 பேர் ஆகியோர் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு இருந்தபோது 2009 ஆம் ஆண்டு ஜனவர் 26 ஆம் திகதி சுடப்பட்டு எரிக்கப்பட்டனர். இதனால் இவர்களின் உடலங்களை அடையாளம் காண முடியாமல் போனது.

முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பில் இருந்து முகாம்களை கைவிட்டு பின்வாங்கி புலிகள் சென்றபோது இச்சம்பவம் இடம்பெற்று உள்ளது. இந்த யுத்த கைதிகள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளை 2010 ஆம் ஆண்டு பயங்கரவாத புலனாய்வு பிரிவு முடுக்கி விட்டது.

நீண்ட புலனாய்வுகளுக்கு பின்னர் மூவரை கைது செய்தனர். இவர்கள் சூட்டு சம்பவத்தில் பங்கேற்றதாக ஈடுபட்டு இருந்தனர் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இவர்கள் விளக்கமறியலில் போடப்பட்டு உள்ளனர்.

Add a Comment