அரசாங்க அலுவலர்களுக்கு நஷ்ட ஈடு

இந்த செய்தியைப் பகிர்க

2005 முதல் 2015 கால பகுதியில் அரசியல் பழி வாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்கள் 36,000 பேருக்கு வருகின்ற மாதங்களில் நஷ்ட ஈடு வழங்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்து உள்ளது.

இதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அவதானத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இந்நிவாரணத்தை வழங்கி வைப்பதில் மிக நீண்ட தாமதம் நிலவுகின்றது. 2016 இல் இதற்கான அமைச்சர்வை பத்திரம் அனுமதிக்கப்பட்டு இருந்தபோதிலும் இது விடயத்தில் இழுபறி நிலவியது.

ஆயினும் கடந்த வாரம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் அலுவலகத்தால் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஏதேனும் விடயங்கள் இருப்பின் அமைச்சரவைக்கு அறிய தருமாறும் அறிவித்து உள்ளது.

Add a Comment