பெற்றோரை இழந்த 176 சிறுவர்கள்

இந்த செய்தியைப் பகிர்க

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக 176 சிறுவர்கள் பெற்றோரை அல்லது தாய் தந்தையரில் ஒருவரை இழந்து உள்ளனர் என்று கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் உரோமில் தெரிவித்தார்.

இவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்தவை வருமாறு

300 இற்கும் அதிகமானோர் இத்தாக்குதலில் காயப்பட்டு உள்ளனர். இவர்கள் குணம் அடைவதற்கும், இயல்பு வாழ்க்கைக்கும் திரும்புவதற்கும் வேண்டிய உதவிகளை செய்வதில் தேவாலயம் கூடுதல் கவனம் செலுத்துகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீள கட்டியெழுப்பி கொடுப்பதே எமது பிரதான நோக்கம் ஆகும். இத்தாக்குதலின் காணொளிகளை பாப்பரசரின் பார்வைக்கு சமர்ப்பித்து உள்ளேன்.

Add a Comment