கதிர்காமர் படுகொலை சந்தேக நபர் மரணம்

இந்த செய்தியைப் பகிர்க

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் படுகொலை சந்தேக நபர்களில் ஒருவர் இறந்து உள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இம்மரணம் சம்பவித்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

62 வயது உடைய முன்னாள் புலி உறுப்பினரான இவருக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

2012 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி முதல் விளக்கமறியலில் போடப்பட்டு இருந்தார். லக்‌ஷமன் கதிர்காமர் 2005 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கொல்லப்பட்டார்

Add a Comment