மீண்டும் வருகிறார் கோட்டா

இந்த செய்தியைப் பகிர்க

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ நியமிக்கப்படுவார் என்று முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்து உள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் 11 ஆம் திகதி இடம்பெற உள்ள பெரமுனவின் பேராளர் மாநாட்டில் வைத்து இது சம்பிரதாயபூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.

அத்துடன் பெரமுனவின் தலைவராக எதிர் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ அன்று பிரகடனப்படுத்தப்படுவார் என்றார்.

ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கான திட்டம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் இவ்வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் பாடுபட வேண்டி உள்ளது என்றும் இவர் தெரிவித்தார்.

Add a Comment