முன்னாள் புலிகளுக்கு குற்ற பத்திரம்

இந்த செய்தியைப் பகிர்க

இறுதி யுத்தத்தில் போர் கைதிகளை படுகொலை செய்ததாக முன்னாள் புலிகள் மூவர் மீது வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்ட மா அதிபரால் குற்ற பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

வழக்காளி தரப்புக்கு தெரியாத ஏனையவர்களுடன் சேர்ந்து முகாமை எரியூட்டி படை தரப்பினர் 26 பேரை படுகொலை செய்ததாக குற்ற பத்திரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இராசதுரை திருவருள், மரியதாசன் சுலக்சன், கணேசன் தர்சன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்ற பத்திரத்தில் சிறை கைதிகளுக்கு மரணத்தை ஏற்படுத்தியதாகவும், சதி திட்டம் தீட்டி ஒத்தாசை வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

கொல்லப்பட்டவர்களில் 08 பேர் இராணுவ அதிகாரிகள். ஏனையோர் கடல் படையை சேர்ந்தவர்கள். 2009 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி புலிகள் பின்வாங்கி சென்றபோதே முகாமுக்கு எரியூட்டப்பட்டு உள்ளது.

இவ்வழக்கு விசாரணை இன்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் ஆரம்பம் ஆகின்றது.

Add a Comment