சாஹ்ரானின் மனைவி பாத்திமா இன்று ஆஜர்

இந்த செய்தியைப் பகிர்க

சாய்ந்தமருது தாக்குதலில் இறந்த பயங்கரவாதிகளின் மரணம் தொடர்பான விசாரணை இன்று புதன்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறுகின்றது.

இதற்காக பயங்கரவாத தாக்குதல்களின் சூத்திரதாரி சாஹ்ரான் மௌலவியின் மனைவி அப்துல் ஹாதர் பாத்திமா குற்ற புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கொழும்பில் இருந்து கொண்டு வரப்படுகின்றார்.

சாய்ந்தமருது தாக்குதலில் சாஹ்ரான் மௌலவியின் மனைவி, மகள் ஆகியோர் உயிர் தப்பி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் கடுவாப்பிட்டிய தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய முஹமட் ஹஸ்துனின் மனைவியான
சாரா எனப்படும் புலஸ்தினி இராஜேந்திரன், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய ஆஸாத்தின் மனைவி பைரூஸா ஆகியோர் சாய்ந்தமருது தாக்குதலில் இறந்து உள்ளமையை உறுதிப்படுத்துவதற்காக இவர்களின் தாய்மார்களின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு மரபணு பரிசோதனைக்காக கொழும்புக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டன.

Add a Comment