டாக்டர் ஷாபி அடிப்படை உரிமை மீறல் மனு

இந்த செய்தியைப் பகிர்க

கட்டாய கரு தடை மேற்கொண்ட குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்து டாக்டர் ஷாபி ஷிஹாப்தீன் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்து உள்ளார்.

தனிப்பட்ட பொறாமை காரணமாகவே இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார் என்று குறிப்பிட்டு உள்ள இவர் பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் உள்ளிட்ட ஆறு பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு பிரதிவாதிகளின் அதிகார துஷ்பிரயோகத்தால் இவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு உள்ளன என்று தெரிவித்து உள்ளார்.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் அடிப்படையும், ஆதாரமும் அற்றவை என்பதற்கான காரணங்களை விலாவாரியாக நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தி உள்ள இவர் நீதிமன்றம் பிரதிவாதிகளால் இவரின் அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்தி இவரை உடனடியாக விடுதலை செய்கின்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கோரி உள்ளார்.

இவரை ஆதரித்து சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் இம்மனுவை தாக்கல் செய்து உள்ளார்.

Add a Comment